வாழ்வளித்த குரல்
"நிலவு தூங்கும் நேரம்"🌻 எனக்கும் இந்தப் பாடலுக்குமான நெருக்கத்தைச் சொல்லி புரிய வைக்க முடியாது. வெறுமையாக இருந்த என் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியது இந்தப் பாடல் தான்! இன்றுவரையான பருவங்களில் எனக்கான ஆறுதலாக இருந்துவரும் பாடல் தான் நிலவு தூங்கும் நேரம். எஸ் பி பாலசுப்பிரமணியம் ஐயா, எஸ் ஜானகி அம்மா இணைத்து இந்த உடன்பாட்டுப் பாடலை ஒரு மத்திர கீதமாக மாற்றியிருப்பார்கள். மீட்பரான இசைஞானியின் இசையில் இந்தப் பாடல் அத்தனை ஆழத்துடன் அமைந்திருக்கும். எனக்குப் பிடித்த பல பாடல்களுடன் என்னால் ஒப்பிட முடியாமல் ஒப்பற்ற நிலையில் தான் இந்தப் பாடலை நான் பார்க்கிறேன். அப்படி எந்தப் பாடலிலும் இல்லாத நெருக்கம் இந்தப் பாடலில் எனக்கு உண்டு. கேட்கும் போதெல்லாம் இந்த மூவருக்கும் நன்றி சொல்ல வேண்டும் என்று தோன்ற வைக்கும் பாடல் இது. மெல்லிய மனதை காற்றைப் போல வருடி போகும் வரிகளை இந்தப் பாடலுக்கு உருவாக்கி தந்த வாலி ஐயாவிற்கும் நன்றி சொல்லி மாளாது. எப்போது கேட்டாலும் என்னை அறியாமல் நான் கண் கலங்குவேன். அந்தக் கண்ணீர் அத்தனை பரிபூரணம் நிறைந்திருக்கும். மீள வாழ்வளித்த குரலை என்றும் மறவேன்! இளைப்பாறு...



