காதல்!


                                      காதல் 🦋!

தன் உள்ளுணர்வை
பகிரங்கமாக திறந்துக் காட்டிடும் அளவுக்கு 
யாரையாவது காண நேரிட்டால் 
காதலியுங்கள் !

இதுதான் காதல்
அதுதான் காதல் என்றெல்லாம்
சொல்லிட முடியாது ;
சொல்ல முடியாத ஓர் உணர்வை
நீங்கள் அடையும்போது
அது காதலாகிறது !

சிறு நாய்க்குட்டியானது
உங்களிடம் காட்டிய அன்பை
அவர்களிடம் காட்டிட தயங்க வேண்டாம் !
அதன் முத்தங்களில்
பொங்கி வழியும் அன்பைப் போன்று
வேறென்ன உள்ளது ?!

காதலை ;
சிறகு முளைத்த வண்ணாத்தியாக
பறக்கவிட்டு ரசித்திடுங்கள் ,
தானே மெதுவாக
கையில் வந்து அமர்ந்துக் கொள்ளும் , வண்ணங்களை பரவவிடும் !

அமரவில்லையா விட்டுவிடுங்கள் !
அது உங்களுக்கானது அல்ல ; 
உயரப் பறக்கட்டும் 🦋
.
_உவா



கருத்துகள்

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்