என்றும் ராஜா!
இசை , எல்லோராலும் விரும்பக்கூடிய உணரக் கூடிய ஒன்று . ஆறுதல் தேடி மனிதர்களிடம் சென்றதை விட இசையை தேடிச் சென்றது தான் அதிகம்.
எல்லார் வாழ்விலும் இசைக்கென்று ஓர் இடம்
இருக்கும் . பலருக்கு வாழ்வே இசை தான் .
ஒரு பாடலாவது கேட்டு முடித்தால் தான் உறக்கம் வரும் என்பவர்களுள் ஒருவள் தான் நானும் . நூறு முறை
கூட ஒரே பாடலைப் கேட்பேனெறால் அது நிச்சயம் ராஜாவின் இசையாக தான் இருக்கும் .
இசையின் மூலம் பலரை வசப்படுத்தியவர் ராஜா ,
சிறுவயதில் தாத்தாவுடன் ரேடியோவில் கேட்க தொடங்கிய ராஜாவின் பாடலைத் தான் இன்றும் கேட்கிறேன் . ராஜாவின் சங்கீதத்தை சலிக்காமல் தினம் கேட்கலாம் . ராஜாவின் இசை என்பதால் சில மலையாளப் பாடல்களையும் என் விருப்ப பட்டியலில் உள்ளது .
டீ கடைகளில் எனக்கு பிடித்த ராஜாவின் பாடல் ஓசை கேட்டால் அப்பாடல் முடியும் வரை கேட்டு விட்டு தான் பிற வேலைகளுக்கு செல்ல மனம் வரும் . இரவின் அமைதியில் நிலவொளியில் அமர்ந்து ராஜாவின் இசையை கேட்பதை விட ஓர் ஆனந்தம் இருக்காது என்றே நம்புகிறேன் !
" இசையை மலராய் நாளும் சூட்டுவேன் ! " - ராஜா🌻

கருத்துகள்
கருத்துரையிடுக