இப்படிக்கு!



வெகு நாட்களுக்கு பின் கதைக்கிறது ,
பொன்னந்தி பொழுதின் வெயிலை
மனம் ருசித்தபடி என்னிடம் , 

அத்தனை இதம்
தந்த வெயில் நீ !
இப்போது கடுமையாக மாறிவிட்டாய் 

நீ யார் எனக்கு ?
இப்போது யாருமில்லை ,
நீ நீயாக இருந்தவரை
நான் இதமாகவே உணர்ந்தேன் 
இப்போது
நீ யாரோவாக காணப்படுகிறாய் 
உன் பிம்பத்தில் கூட நீ இல்லை

எங்கு தான் சென்றாய் ?
ஏன் தயங்குகிறாய் ?
உன்னால் உயிர் ஊட்டிக்கொண்டு
மீளவே முடியாதா என்ன ?

உ(எ)ன்னை காணவே
காத்திருக்கிறேன் !
உன் கூடு இதோ
இங்குதான் உள்ளது !
பறந்து என்னிடம்
இந்த மனதிடம் வா !
வந்து உன் முத்தங்களைப்
பெற்றுக்கொள்🌻
.
.

_உவா

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்