என் கடல்

கடலைப் பார்த்தால்
பயமாக இருக்கிறது
என்கிறார்கள் என் காதுபட

எனக்கு கண்ணீர் வருகிறது
தவிப்பில் தொண்டை வறல்கிறது
திரும்பி பார்க்கையில்
என் கை கால்களை 
யாரோ பிய்த்துச் செல்கிறார்கள்
நான் ஒன்றுமே சொல்லவில்லை ,

இப்படி குண்டு பல்பு வெளிச்சத்தில்
என்னை போட்டுவிட்டு போவதற்கு பதில்
சற்று அப்புறப்படுத்தி இருளின்
பிடியில் விட்டிருக்கலாம்
நான் சொல்ல நேர்வதற்குள்
சென்றுவிட்டார்கள்

அதன்பின்
யாருமே இவ்வழியாக வருவதில்லை 
இன்னும்கூட தூரத்தில் அவர்கள் பேசுவது
என் காதில் விழுகிறது ,
கடலைப் பார்த்தால் பயமாக இருக்கிறது
என்று சொல்லிக்கொண்டே நடக்கிறார்கள்
எனக்கு கண்ணீர் வருகிறது
அழுது தீர்க்க வேண்டும் போல் உள்ளது
அவர்கள் பயப்படும் அந்த கடல் மடிக்கு செல்ல வேண்டும்

இல்லையேல்
அந்த கடலை உன் மடியில் நிரப்பி
அழுது தீர்க்க வேண்டும் .

_உவா

08-12-22
11:30 யாமம்

கருத்துகள்

  1. கடல் மேல் உண்மையாகவே பயம் தான். ஆனால் உங்கள் கவிதையில் கடலினை பார்க்கும் பார்வை சற்று மாறி போனது. வலி மிகுந்த வழிகளை காட்சிபடுத்தும் சிறந்த கவிதை :)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்